ஒடிஸாவில் போலங்கீர் நகரத்தில் வசிக்கும் குல்தீப் பட்நாயக் - பிரமிலா குமாரி தம்பதியின் ஏழு வயது மகன் வெங்கட் ராமன் பட்நாயக், மைக்ரோசாப்ட் டெக்னாலஜி அசோசியேட் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சாதனை படைத்துள்ளார். சிறு வயதில், மைக்ரோசாப்ட் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர் என்ற பெருமையையும் ராமன் பெற்றுள்ளார்.
7 வயதில் இவ்வளவு திறமையா... மைக்ரோசாப்ட்டுக்கு ஷாக் கொடுத்த சிறுவன்! - ஓடிசா சிறுவனின் அசாத்திய திறமை
பாலங்கிர்: மைக்ரோசாப்ட் டெக்னாலஜி அசோசியேட் தேர்வில் ஏழு வயது சிறுவன் தேர்ச்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வெங்கட்ராமனுக்கு ஐந்து வயது முதலே மென்பொருள் உருவாக்குதல் குறித்த படிப்புகளில் ஆர்வமாக இருந்துள்ளார். இதுவரை 250க்கும் அதிகமான செயலிகளை தயாரித்துள்ள வெங்கட்டை, பல உலகளாவிய நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. சிறு வயதிலே நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் டெக்னாலஜி அசோசியேட் தேர்வுக்காக தினம்தோறும் ஏழு மணி நேரம் செலவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். இப்போதே, அவர் ஐந்து கணிப்பொறி செயல்பாடு மொழிகளில் சிறந்து விளங்குகிறார். எதிர்காலத்தில், வானியலாளர் (விண்வெளி ஆராய்ச்சியாளர்) ஆவதே தனது லட்சியம் என அந்த சிறுவன் கூறியுள்ளார்.
மென்பொருள் உருவாக்குவதில் உள்ள சிறுவனின் ஆர்வத்தை புரிந்துகொண்ட பெற்றோர், அவனை பெங்களூருவில் உள்ள மென்பொருள் படிப்பு பயிற்சி பள்ளியில் சேர்க்க முயற்சி செய்தனர். பள்ளி நிர்வாகம் சிறுவனின் வயதை கண்டு முதலில் தயக்கம் காட்டினர். பின்னர், சிறுவனின் திறமையை கண்டு எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். வெங்கட் ராமனின் லட்சியம் நிறைவேற தேவையான உதவுகளையும், வழிகாட்டுதலையும் வழங்குவோம் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.