கரோனா தொற்றுக்கு தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்திற்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தின் ஒருங்கிணைந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனையை சீரம் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் புனேவிலுள்ள சசூன் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது, இதற்காக தன்னார்வலர்களை பதிவு செய்துவருகிறோம். இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 8550960196, 8104201267 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.