தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிர்த்தியாகம் செய்த மகன்: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காவல் ஆய்வாளர்! - Martyre Inspector

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த காவலர் அர்ஷாத் கான் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி நெஞ்சில் வலியுடனும், கண்ணில் நீருடனும் பேரனைத் துாக்கிச் செல்லும் தந்தையின் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

senior-police-officer

By

Published : Jun 18, 2019, 2:41 PM IST

அர்ஷத் கான் அனந்த்நாக் நகரில் உள்ள சதர் காவல் நிலையத்திற்கு ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அனந்த்நாக் நகரின் கே.பி. சாலையில் கடந்த புதன்கிழமையன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அர்ஷத் கான் படுகாயமடைந்தார். மேலும், இந்தத் தாக்குதலில் ஐந்து சிஆர்பிஃஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த கான், டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார். அவரின் உடலுக்கு நேற்று ஸ்ரீநகரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்தியாகம் செய்த மகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய காவல் ஆய்வாளர்

உயிரிழந்த கானுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள், பெற்றோர், சகோதரர் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் 2002ஆம் ஆண்டு மாநில காவல் துறையில் நியமிக்கப்பட்டார்.

இதில் மகனின் மறைவிற்குப் பேரனை கையில் தூக்கிக் கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் திரும்பிய மூத்த காவல் ஆய்வாளர் ஹசீப் முகல் புகைப்படம் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details