கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதால், பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், பொது சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கை உள்ளிட்டவற்றை உரியமுறையில் எடுத்து மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறியதாகக் கூறி டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித் துறையின் முதன்மைச் செயலர் ஆகிய இருவரையும் மத்திய உள் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.