கரோனா லாக்டவுனால் பாதிப்புக்குள்ளான குடிபெயர்ந்த தொழிலாளர்களை தங்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஷார்மிக் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கிவருகிறது. நாட்டில் அதிக குடிபெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா அரசுக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் இந்த விவகாரம் தொடர்பாக உரசல் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ரயில்கள் போதுமானதாக இல்லை எனவும், அவை முறையான சேவைகளை வழங்கவில்லை எனவும் மகாராஷ்டிரா அரசு புகார் அளித்தது. மகாராஷ்டிரா அரசு தொழிலாளர்களின் விவரங்களை தயார் செய்து முறையாக கொடுத்தால் உடனடியாக 125 சிறப்பு ரயில்களை இயக்கத் தாயர் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி தரும் விதத்தில் தெரிவித்தார்.