நமது நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் நேரு, நமது ராணுவ தேவைகளுக்காக இதர நாடுகளை சார்ந்திருப்பது என்பது தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். நீண்டகாலத்துக்கு நமக்கு தேவையான ராணுவ கருவிகளை நாமே அவசியம் தயாரிக்க வேண்டும் மற்றும் சுயசார்பு பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் என்றும், சுயசார்பு என்பதையும் , தற்காலிகம் என்ற வார்த்தையின் பொருளையும் அறிந்து கொள்ள முடியாத மெய்யறிவை கொண்டிருக்கும், ஆட்சியாளர்களின் குறுகிய கண்ணோட்டத்தால் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் இந்தியா பிறரை சார்ந்திருப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக, எட்டு குழுக்கள் மற்றும் பணிக்குழுக்கள் தாக்கல் செய்த பல்வேறு அறிக்கைகளில் , உள்ளூர் அளவில் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்வதில் சுய சார்பை நோக்கி முன்னேற வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், திட்டத்தை திறன் வாய்ந்த அளவில் அமல்படுத்துவதில் குறைபாடு காரணமாக, இந்த விஷயம் எங்கே தொடங்கியதோ அங்கேயே இருக்கிறது. ஆத்மநிர்பார் பாரத் என்று தலைப்பிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நிதி அமைச்சர் அளித்தார்.
பாதுகாப்பு துறையில் இந்தியா சுயசார்பை அடையக்கூடிய பாதையைக் கொண்ட கொள்கை அறிக்கைகளாக அவை உருவாக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை கட்டமைப்பில், 2025-ம் ஆண்டுக்குள் 35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியும், 75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி வருவாய் இலக்கையும் அடையும் குறிக்கோள்கள் இடம் பெற்றிருக்கின்றன.
பாதுகாப்பு துறையின் உள்நாட்டு தயாரிப்புகள் என்பது இப்போது 80 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் ராணுவத் தொழிற்சாலைகளில் 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை முன்னெடுக்க 2001ம் ஆண்டில் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளன.
உள்நாட்டு ராணுவ தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் உள்ளூரில் இருந்து கொள்முதல் செய்வதற்காக 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்தார். இறக்குமதி செய்வதில் இருந்து 101 ராணுவ பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் தரப்பட உள்ளன. ஆத்மநிர்பார் குறிக்கோளை அடைவதற்கு இது போன்ற ஊக்கமளிக்கும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.