தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ப்பூர் விமானநிலையத்தில் கத்தை கத்தையாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்களால் கத்தை கத்தையாக வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம்

By

Published : Mar 27, 2019, 10:41 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் மார்ச் 25ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்டவை குறித்துபுள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் மாநில வாரியான இந்தப் புள்ளிவிவரத்தில் தமிழ்நாட்டில்தான் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் அதிக அளவில் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 107 கோடியே 24 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. அங்கு 104 கோடியே 53 லட்சம் ரூபாய் ஆவணமில்லாத பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 103 கோடி ரூபாயுடன் ஆந்திர மாநிலம் மூன்றாவது இடத்திலும், 92 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புடன் பஞ்சாப் நான்காவது இடத்திலும் உள்ளன.

கர்நாடகத்தில் 26 கோடியே 53 லட்ச ரூபாயும், மகாராஷ்டிராவில் 19 கோடியே 11 லட்சம் ரூபாயும், தெலங்கானாவில் 8 கோடியே 20 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தத்தில் மார்ச் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 143 கோடியே 37 லட்ச ரூபாய் ரொக்கமும், 89 கோடியே 64 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும், 131 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும், 162 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர்விமான நிலையத்திற்கு இரண்டு பயணிகள் கொண்டு வந்த பெட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் கத்தை கத்தையாக வெளிநாட்டுப் பணங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 48 லட்சம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டு பணம் கொண்டுவரப்பட்டது குறித்து சுங்கத் துறை அலுலவர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details