மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலர் ஒருவர் காவல் துறையில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், "பாலியல் தொழிலில் ஈடுபடும் இரு பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டேன். அதனை காணொலியாக எடுத்து என்னை மிரட்டுகிறார்கள்" என்றார். இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உல்லாசமாக இருந்ததை காணொலி எடுத்து மிரட்டிய ஐந்து பெண்கள்
அதன்படி, இந்தச் சம்பவத்தில் ஐந்து பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர். அவர்கள், அரசியல்வாதிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் தேவையான பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அனுப்பும் பணியை செவ்வனே செய்துவந்துள்ளனர். அதோடு, அவர்கள் அந்தச் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை காணொலியாகப் பதிவு செய்துள்ளனர். இதனைக் காட்டி பலரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தெரியவந்ததையடுத்து, இந்த வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்ள தனியாக ஒரு குழு காவல் துறையினரால் அமைக்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்களும்... கைப்பற்றப்பட்ட 92 காணொலிகளும்...