தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தேச துரோக வழக்கை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது' - கன்னையா குமார் குற்றச்சாட்டு - குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசு

ராஞ்சி: தன் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கன்னையா குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sedation
Kanhaiya Kumar

By

Published : Feb 29, 2020, 10:07 AM IST

Updated : Feb 29, 2020, 12:46 PM IST

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் செயல்பாட்டாளருமான கன்னையா குமார் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டெல்லி அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. இது குறித்து கன்னையா குமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவாரன கன்னையா குமார் வரப்போகும் அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். இதைத் தடுப்பதற்காகவே இதுபோன்ற வழக்குகளை மத்திய அரசு உள்நோக்கத்துடன் பதிகிறது.

இதற்கு டெல்லி மாநில அரசும் துணை போகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு எவ்வாறு போடப்படுகிறது என நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். எனவே தன் மீதான வழக்கை விரைந்து நடத்தி முடித்து தர வேண்டும் என நீதிமன்றத்திற்கு கன்னையா குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த போராட்டங்களில் தேச விரோத முழக்கங்களை தொடர்ச்சியாகச் செய்ததாகவும் டெல்லிக் காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் பதிவுசெய்துள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:சிரியா, துருக்கி மோதல்: பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் ?

Last Updated : Feb 29, 2020, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details