தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி 144 தடை உத்தரவின் பின்னணி!

அயோத்தியில் வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ் குமார் தெரிவித்தார்

Section 144 in Ayodhya

By

Published : Oct 14, 2019, 9:40 AM IST

சர்ச்சைக்குரிய நிலத்தில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்று அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ் குமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் வரவிருக்கும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆனால் உண்மையில் இந்த விவகாரத்தில் மனுதாரர் ஹாஜி மெஹ்மூத், சர்ச்சைக்குரிய நிலத்தில் தீபாவளியைக் கொண்டாட அனுமதி பெற்றால், அங்கு நமாஸ் வழங்க அனுமதி தாருங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பாலி நகரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கயன்சந்த் பராக் நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்னர் அயோத்தியில் ராம் மந்தீர் கட்டப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் அயோத்தியா பிரச்னையை கையிலெடுக்கும் சிவ சேனா!

ABOUT THE AUTHOR

...view details