இந்தியன் சொசைட்டி விண்வெளி மருத்துவத்திற்கான (IASM) 58வது வருடாந்திர மாநாட்டு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் விமானப் பணியாளர் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யானுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கான குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்கான திரையிடல் (ஸ்கிரீனிங்) செயல்முறை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த ஸ்கிரீனிங் செயல்முறையானது மிகவும் சிறப்பாக தொழில்நுட்ப ரீதியாக இந்தப்பணி நடைபெறுவதாக அவர் கூறினார். ககன்யான் திட்டத்திற்காக இந்திய விமானப்படை 12பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.