தேசிய தொழில்நுட்ப நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தேசிய தொழில்நுட்ப நாளையொட்டி குடிமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா வைரசுக்கு (தீநுண்மி) எதிரான உலகளாவிய போரில் அறிவியல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய முக்கியக் கருவிகள் முன்னணி வகிக்கின்றன. அனைத்துவிதமான முன்னேற்றத்திற்கான முக்கியக் கூறுகளாக அறிவியல், தொழில்நுட்பம் உள்ளன.
1998ஆம் ஆண்டில் நமது நாடு முன்னெடுத்த அணுசக்தி சோதனைகளின் நிறைவைக் குறிக்கும் வகையில், தேசிய தொழில்நுட்ப நாளன்று சக குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில், நாட்டை தன்னம்பிக்கை உறுதியாக்கிய அறிவியல் சமூகத்தின் ஒப்பற்ற பங்களிப்பை நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம்.
கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் முன்னணி வகிக்கும் நமது அறிவியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை நாம் அனைவரும் போற்றுவோம். இது நாட்டைப் பெருமைப்படுத்துகிறது.
இன்று, கரோனா தீநுண்மி பெருந்தொற்று நோயிலிருந்து உலகை விடுவிப்பதற்கான முயற்சிகளில் தொழில்நுட்பம் பலருக்கு உதவிவருகிறது.
கரோனா தீநுண்மியின் பரவலைத் தடுக்க, மக்களைப் பாதுகாக்க பல்வேறு வழிகளில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ள அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். சிறந்த நாட்டை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
கோவிட்-19க்கு எதிரான போரில் முன்னணி வகிக்கும் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் - கோவிந்த் புகழாரம்!
1998ஆம் ஆண்டு மே 11 அன்று ராஜஸ்தான் மாநிலம் இந்திய ராணுவத் தளத்தில் மத்திய அரசு மேற்கொண்ட வெற்றிகரமான பொக்ரான்-2 சோதனையைப் பறைசாற்றும் வகையில் தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க :இந்திய-நேபாள மோதலுக்கு வித்திட்ட கைலாஷ்-மானசரோவர் புதிய வழித்தடம்!