திருவனந்தபுரம்: அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் 47ஆவது மேயராக ஜான் டைலர் ஹம்மன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் மிக இளைய நகர நிர்வாகி என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கேரளாவின் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் இவர் தனது அறிவியல் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். அந்த வகையில் இவர் இளவயது மேயர் என்ற சாதனையை தனதாக்கினார். ஆரியா ராஜேந்திரனை திருவனந்தபுரம் நகரக் கழகத்தின் மேயராக உயர்த்தும் முடிவு சிபிஎம் மாவட்ட செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆர்யா ராஜேந்திரன், முடவன்முகல் வார்டில் இருந்து வென்றவர் ஆவார்.
ஆர்யா, சிபிஎம்மின் குழந்தைகள் பிரிவின் மாநிலத் தலைவரும், எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினருமான உள்ளார். இந்நிலையில், சிபிஎம் மாவட்டத் தலைமை திருவனந்தபுரத்தின் மேயர் பதவியை ஒரு இளைஞியின் கைகளில் ஒப்படைக்கும் புரட்சிகர முடிவை எடுத்துள்ளது.
உலகின் இளவயது மேயராகிறார் ஆர்யா ராஜேந்திரன்! இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஆர்யா ராஜேந்திரன், "எனது தந்தை தற்போதும் கட்சியின் கிளைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் என்னை ஒருபோதும் கட்சிக்கு செல்லச் சொல்லவில்லை.
அவர் கட்சியை நேசிக்கும் ஆத்மாத்தமாக நேசிக்கும் ஒரு நபர். மேலும் நான் எப்போதும் இடதுசாரி என்று நம்புகிறேன். எங்களது சித்தாந்தம் சரியானது, அதனால்தான் நான் கட்சியில் சேர்ந்தேன். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை உறுதி செய்வேன்” என்றார்.
இதையும் படிங்க:நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் 21 வயது இளம்பெண் மேயராகத் தேர்வு