உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதற்காக போராடும் மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்களுக்கு பலர் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, புதுச்சேரி செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜசேகர், பத்மபிரியா தம்பதியின் மகள் ஸ்ரீசாயா (15). இவர் கரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கண்ணைக் கட்டிக்கொண்டு இடைவிடாமல் ஒரு மணி நேரம் வீணை வாசித்தார்.