மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா சிட்பண்டு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள அப்போதைய கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை வீட்டிற்கு சிபிஐ சென்றது. அப்போது கொல்கத்தா காவல்துறைக்கும் சிபிஐ அலுவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, அது அரசியல் சர்ச்சையாக வெடித்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார். தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.
'ராஜீவ் குமாரை கைது செய்யத் தடையில்லை' - உச்சநீதிமன்றம் உத்தரவு - சாராதா சிட்பன்ட் முறைகேடு
டெல்லி: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் கைது செய்வதற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் விவகாரம் உச்சநீதிமன்றம் செல்லவே, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடையை, தற்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்குள் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. 7 நாட்களில் நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.