உன்னாவ் வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட சிபிஐ இயக்குநர் நேரில் ஆஜராகி வழக்கின் விசாரணை நிலை குறித்து விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.
உன்னாவ் வழக்கு; சிபிஐ இயக்குநர் ஆஜராக உத்தரவு! - SC
டெல்லி: உன்னாவ் வழக்கில் சம்பந்தப்பட்ட சிபிஐ இயக்குநர் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை நிலை குறித்து விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SC
உன்னாவ் பாலியல் வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த விபத்து ஆகியவை குறித்து சிபிஐ இயக்குநரிடம் ஆலோசிக்க துணை தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநர் இன்று நேரில் ஆஜராக முடியாது எனக் கூறி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்க துணை தலைமை வழக்கறிஞர் மேத்தா கோரிக்கைவிடுத்தார். ஆனால், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.