உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 1992ஆம் ஆண்டு, அது இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், 2010ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில் 'அதில் ஒரு பகுதி, ராமர் கோவில் கட்டுவதற்கு, ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும் மற்றொரு பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும், என மூன்று பாகங்களாகப் பிரிக்க வேண்டும். மீதமுள்ள பகுதி, இந்து மத அமைப்பான, நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்பட வேண்டும்' என கூறப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு; இன்று விசாரணை! - ராமர்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 1992ஆம் ஆண்டில் அது இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான, கோபால் சிங் விஷாரத் என்பவர், உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனுவில் ‘அயோத்தி வழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த வழக்கில் சுமுக தீர்வு காண, மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டும், மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனால், அயோத்தி வழக்கை, உடனடியாக விசாரித்து, தீர்வு காண வேண்டும்’ என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.