தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: பவன் குமாரின் மறுசீராய்வு மனு தள்ளுபடி - பவன் குமார்

டெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளி பவன் குமார் தாக்கல்செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Pawan Kumar
Pawan Kumar

By

Published : Mar 2, 2020, 11:32 AM IST

2012ஆம் ஆண்டு, நிர்பயா என்ற துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டார். அதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இருப்பினும் குற்றவாளிகள் தூக்குத் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து மறுசீராய்வு மனுக்களையும் கருணை மனுக்களையும் தாக்கல்செய்துவருகின்றனர்.

நாளை அதிகாலை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல்செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படிங்க டெல்லி வன்முறை: உயிரிழப்பு 46 ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details