உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே, கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கின் விசாரணை குழுவில் நீதிபதி சவுகானை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் மனு தாக்கல் செய்தார். சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார், அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.