தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

50% ஒப்புகைச் சீட்டு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! - தேர்தல்

உச்ச நீதிமன்றம்

By

Published : May 7, 2019, 11:08 AM IST

Updated : May 7, 2019, 12:08 PM IST

2019-05-07 11:05:48

50 விழுக்காடு வாக்குகளை ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மக்களவைத் தேர்தலில் 50 விழுக்காடு வாக்குகளை ஒப்புகை சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகளை தேர்தெடுத்து, அதில் உள்ள ஒப்புகை சீட்டு கருவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்து தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து 21 கட்சிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  இந்த வழக்கை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள முறையே தொடரலாம் எனவும்   உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Last Updated : May 7, 2019, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details