உலகம் முழுவதும் கரோனா தொற்று சூரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துவரும் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
தற்போது எவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முடியாது எனவும், வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசுதான் எப்போதும் முடிவெடுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் தலைமையிலான அமர்வு இது குறித்து தெரிவித்துள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்டுவருவது குறித்த பொதுநல வழக்கில், ஈரான் தூதரகத்தோடு அரசு தொடர்பில் இருப்பதாகவும், தூதரக அலுவலர்கள் ஈரானில் சிக்கியுள்ள 1000 மீனவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்பது தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளுக்கும் பதிலளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு தன்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறது. அமெரிக்க அரசு அங்கு உள்ள வெளிநாட்டவருக்கான நுழைவு இசைவு (விசா) காலத்தை நீட்டித்துள்ளது. ஆனால் தற்போதைய நிலைமையில் எவரையும் மீட்டுவர முடியாது” எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இனி தனியார் மருத்துவமனைகளும் பிளாஸ்மா சிகிச்சை செய்யலாம் - ஐ.சி.எம்.ஆர்