உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குல்ஜித் கவுர் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவிலுள்ள செக்டார் 31 பகுதியில் வசித்து வந்துள்ளார். 60 வயதான இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நவ்ஜோத் சிங்கன் மனைவி.
சொத்துத் தொடர்பான பிரச்னையின் காரணமாக வீட்டில் தனியாக வசித்து வரும் இவர், வீட்டு வேலை செய்வதற்கு ஒரு தம்பதியை கடந்த வாரம் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.