நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.19) மாநிலங்களவையில் நடந்தக் கூட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேசினார். அதில், ''உச்ச நீதிமன்றத்தின் போக்குகளில் சில குழப்பங்கள் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்றத்தில் குறைந்து வருகிறது.
மகளிர் நீதிபதிகள், ஒடுக்கப்பட்டப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்ட நீதிபதிகள் ஆகியோரை நியமிப்பதில்லை. ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களே நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களால் சமூகத்தின் முழுமையான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது.