இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விஜய் மல்லையாவை,கடந்த 2017ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளி எனஅறிவித்தது. தற்போது இங்கிலாந்தில் உள்ள இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் தன்னுடைய வாரிசுகளான சித்தார்த், தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் மாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.