உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ரஞ்சன் கோகோய் மீது விசாரணை கோரி 2018ஆம் ஆண்டில் பொதுநல வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
கோகோய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி - ரஞரசன் கோகோய்
டெல்லி : அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோகோய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
2016ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு வழக்கில் ரஞ்சன் கோகோய் ஒரு சார்பாகவும், முறை தவறியும் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டிருந்த அம்மனு மீதான இறுதிகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது நீதிமன்றம், ரஞ்சன் கோகோய் பணி ஓய்வு பெற்றுவிட்டதால், 2018ஆம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட இந்த மனுவை தற்போது விசாரிப்பது பயனற்றது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.