கர்நாடகா மாநிலத்தின் கென்னகேசவா மலைப்பகுதியில் உற்பத்தியாகி கடலூர் அருகே உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளது.
தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி - supreme court dismiss tamilnadu government case
டெல்லி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
supreme court
ஆனால், தடுப்பணை கட்டினால் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் அதுமட்டுமின்றி தென்பெண்ணை ஆற்றுக்கு கர்நாடகா முழு உரிமை கோர முடியாது எனக் கூறி தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாட்டு அரசின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டது.