நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ உத்தரவிட வேண்டும் என்று பரம்வீர் சிங் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. (சிறப்பு விடுப்பு மனு) தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, "இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின்கீழ் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்க அறிவுறுத்தி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்பு அலுவலகங்களில் அரசு நிர்வாக அலுவலர்கள் / காவல் துறை உயர் அலுவலர்கள் சிசிடிவி நிறுவ வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை விரைவில் செயல்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டது.