உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போலனா, ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் விசாரணை செய்தது.
அதில், சென்னையில் செயல்பட்டு வரும் எட்டு மாடிகள் கொண்ட பில்ராத் என்னும் தனியார் மருத்துவனையின் நான்கு முதல் எட்டு மாடிகள் விதிகளுக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டது என்று கூறி, அதனை இடிக்க 2019ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு தடைவிதித்து தற்போது, அந்த மருத்துவனையின் முதல் நான்கு மாடிகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசை பயன்படுத்திக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முதலில் தமிழ்நாடு அரசு அந்த தனியார் மருத்துவனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியது. மேலும் 2009ஆம் ஆண்டில் மருத்துவனையில் விதிகளை மீறி, கட்டப்பட்ட நான்கில் இருந்து எட்டாம் மாடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மருத்துவனையில் உள்ள 250 படுக்கைகளில் குறைந்தபட்சம் 150 படுக்கைகளை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் பில்ராத் மருத்துவனை சார்பாக, வழக்காடிய மூத்த வழக்கறிஞர் என்.கே. கவுல் தெரிவித்தார்.
சென்னையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதைுயும் படிங்க:சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தற்போதுள்ள மாவட்டத்திலேயே தேர்வு