குஜராத் மாநிலம் நவகாமில் சர்தார் சரோவர் அணை உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறையையும், மின்சார தேவையையும் இந்த அணை தீர்த்துவருகிறது. கடந்த சில நாட்களாக நர்மதா ஆற்றிலிருந்து தண்ணீர் அதிகளவில் அணையில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், அணை முழு கொள்ளளவான 138.68 அடியை எட்டியுள்ளது.
நிரம்பி வழியும் சர்தார் சரோவர் அணை; சம்பந்தப்பட்ட அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - சர்தார் சரோவர் அணை
காந்திநகர்: சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, பல கிராமங்கள் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால், பிரச்னையை தீர்க்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SC
இந்நிலையில், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியுள்ளது. இது வடஇந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கொண்ட குழு நீர் மட்டம் உயர்வது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.