நாடு முழுவதும் கரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் அனைவரும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு வரும் ஜூன் மாதம் அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கரோனா பாதிப்பு லாக்டவுன் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குடிபெயர்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை இந்த லாக்டவுன் அசைத்துபார்த்துள்ளது.