தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிஎஸ்-4 வகை வாகனங்கள் விவகாரம்: மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் விற்பனையான வாகனங்களை பதிவு செய்யலாம்! - உச்ச நீதிமன்றம்

டெல்லி : கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட 9 லட்சத்து 56 ஆயிரத்து 15 பி.எஸ் -4 ரக வாகனங்களுக்கு மட்டும் பதிவு செய்யும் அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட பி.எஸ் - 4 வகை வாகனங்களுக்கு மட்டும் பதிவு செய்ய அனுமதி!
மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட பி.எஸ் - 4 வகை வாகனங்களுக்கு மட்டும் பதிவு செய்ய அனுமதி!

By

Published : Aug 13, 2020, 10:03 PM IST

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னர் பி.எஸ்-4 வகை வாகனங்களை உற்பத்தி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது என, மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி பெற்றிருந்தது.

ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றத்தின் ஆணையை மீறி 2 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக, வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். இந்நிலையில், இந்த வழக்கானது இன்று(ஆக.13) உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இ-வாகன் போர்ட்டலில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பதிவேற்றப்பட்ட வாகனங்கள் குறித்த விவரங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மார்ச் 31ஆம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் 4 வகை வாகனங்களுகக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

மேலும், மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் வாங்கப்பட்ட பி.எஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை" என அறிவித்தது. இந்த புதிய உத்தரவின் படி, மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னர் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 39 ஆயிரம் பி.எஸ்-4 வகை வாகனங்கள் பதிவு செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 12 முதல் மார்ச் 31 வரை விற்பனை செய்யப்பட்ட 9 லட்சத்து 56 ஆயிரத்து 15 பி.எஸ் - 4 வகை வாகனங்களில், 9 லட்சத்து ஆயிரத்து 223 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details