தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தாக்கம்: எஸ்பிஐ வங்கியின் 3 கிளைகள் மூடல்! - Sbi news

ஸ்டேட் பாங்க் மும்பையில் இருக்கும் தனது இரண்டு கிளைகளையும், தானேவில் இருக்கும் ஒரு கிளையையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

Sbi closed branches
Sbi closed branches

By

Published : Jun 15, 2020, 1:36 AM IST

மும்பை:நாட்டின் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ தனது மூன்று கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.

மும்பையில் இரண்டு கிளைகளும், தானேயில் ஒரு கிளையும்தான் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இக்கிளையில் பணிபுரியும் எட்டு ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 568 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 830 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மொத்த தொற்று நிலவரத்தில் இருபத்து எட்டாயிரத்து 78 ஆயிரத்து 134 பேர் மும்பை நகரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகரத்தில் இரண்டாயிரத்து 113 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details