மேகாலயாவின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ததகதா ராய், தனது ஐந்தாண்டு கால பணியை நிறைவு செய்த காரணத்தால் தற்போது அம்மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் எழுந்தது. இதனையடுத்து, கோவாவின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்! - புதிய ஆளுநர்கள் நியமனம்
டெல்லி: மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்!
மகாராஷ்டிராவின் ஆளுநராக பணியாற்றிவரும் பகத் சிங் கோஷ்யரிவுக்கு, மேலதிக பொறுப்பாக கோவா அரசின் ஆளுநர் பொறுப்பையும் கவனிக்குமாறு குடியரசுத் தலைவர் மாளிகை வலியுறுத்தியுள்ளது.