பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்த சசிகலா, தண்டனைக்காலம் முடிந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை தேதிக்கு சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
காரில் அதிமுக கொடியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேவந்த சசிகலா!
11:14 January 31
தற்போது உடல் நலம் சீராகியுள்ள நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு வெளியே சசிகலாவின் ஆதரவாளர்களும் அமமுக தொண்டர்களும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். டிஸ்சார்ஜ்க்குப் பின் சசிகலா வீட்டிலேயே தன்னை சில நாட்களுக்கு தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வெளியே வந்தார் சசிகலா.
மருத்துவமனை வாசலில் குவிந்திருந்த சசிகலா ஆதரவாளர்கள் காரில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூருவில் ஒரு வாரம் ஓய்வெடுத்துவிட்டு பின் சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு; ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதி