கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழையு தேர்தல் அலுவலர் தேவிக்கு வழங்கினார்.
ஆனால், ஆளும் அதிமுக தரப்பு தலையீடு காரணமாக தேர்தல் அதிகாரி மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் தேவிக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, மறுநாள் காலை 5 மணிக்கு அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினியை வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கியுள்ளார்.
இதனை எதிர்த்து தேவி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அதிகாரிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் இல்லை என்று கூறியது. மேலும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி தேர்தல் வழக்கு மட்டுமே தொடரமுடியும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினிஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் நேற்று (பிப்ரவரி 14ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.
பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து செய்த உச்ச நீதிமன்றம்! - உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது
டெல்லி: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேரும் பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து : பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
இதையும் படிங்க : 'மிகவும் வேதனையடைந்தேன்' - அதிருப்தியடைந்த மம்தா