டெல்லியில் நாளை புழுதிப் புயல்! - தில்லி
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய புழுதிப் புயல் வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக ஸ்டைமெட் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புகை மூட்டத்துடன் காணப்படும் டெல்லி
இதுகுறித்து ஸ்கைமெட் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளதாவது, டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( 5 ஏப்ரல் 2019) பலத்த இடியுடன் கூடிய புழுதிப் புயல் வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று, ஏப்ரல் 16ஆம் தேதி மீண்டும் புழுதிப் புயல் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. முன்னதாக வீசிய புயல்களை விட இது தீவிரமாக இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.