ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில்தான், சில அதிசயங்களும் நிகழ்கின்றன. அப்படியொரு அதிசயத்தைத்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் சஹரன்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர்.
வாகன போக்குவரத்து அடியோடு குறைக்கப்பட்டுள்ளதால், உ.பி.யில் காற்றின் தரக் குறியீடு 50-க்கும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, சஹரன்பூரில் உள்ள மக்கள் 30 ஆண்டுகளில் முதல் முறையாக இமயமலையின் பனி மூடிய சிகரத்தைப் வீட்டிலிருந்தபடியே பார்த்து ரசிக்கின்றனர்.
பலர் இமயமலையின் அழகிய புகைப்படங்களை கிளிக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
30 ஆண்டுகளில் முதல்முறையாக காட்சி தந்த இமயமலை இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. மழை நின்ற பிறகு வானிலை மிகவும் அழகாக இருந்தது. நான் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோதுதான் இமயமலையின் சிகரத்தைப் பார்த்து வியந்துவிட்டேன்" என்றார்.
இதையும் படிங்க:அரபு நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப தயாராகும் மக்கள்!