தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை; ‘காவி’யை வலியுறுத்திய காங்.! - congress

போபால்: காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங்கின் ஊர்வலத்தில் காவலர்களை காவி துண்டு அணிய வற்புறுத்தப்பட்டுள்ள விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

digvijaya singh

By

Published : May 8, 2019, 12:06 PM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய சிங்கும், ‘கம்ப்யூட்டர் பாபா’ எனப்படும் நம்டாஸ் தியாகி ஆகிய இரு தலைவர்களின் தலைமையில் போபாலில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களை காவித் துண்டு அணியும்படி காங்கிரஸ் தொண்டர்கள் வற்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

‘காவி’களின் கட்சி என அழைக்கப்படும் பாஜகவை, அதே காரணத்தை வைத்து எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங்கின் ஊர்வலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details