தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - அமைச்சர் உறுதி

புதுச்சேரி: மாநிலத்தைப் பொறுத்தவரை மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 21, 2020, 8:02 PM IST

மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இது பல தரப்பு மக்களிடையே விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று வெளியிட்ட காணொலியில், "புதுச்சேரியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 721 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதுச்சேரி முழுவதும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுவிடும்.

மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

கடந்த ஏப்ரல் ஒன்று முதல் 19ஆம் தேதி வரை 317 நோயாளிகள் மட்டுமே புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மாநில அரசு ஊரடங்கு உத்தரவு தளர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" இவ்வாறு அவர் காணொலியில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: இதுதான் நீங்கள் மருத்துவருக்கு செய்யும் மரியாதையா? மகப்பேறு மருத்துவர் வருத்தம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details