தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிரோமணி அகாலிதள கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை - சுட்டுக் கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் முக்கியப் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

SAD leader shot dead in Amritsar; party blames Cong, demands CBI probe
SAD leader shot dead in Amritsar; party blames Cong, demands CBI probe

By

Published : Jan 3, 2020, 7:57 AM IST

பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்தவர் பிகாரம் சிங் மஜிதியா. இவருக்கு நெருக்கமானவர் குர்தீப் சிங். 50 வயதான குர்தீப் சிங் கட்சியின் முக்கியப் பிரமுகராவார்.

இவரை அடையாளம் தெரியாத நபர்கள் ஜனவரி 1ஆம் தேதி சுட்டுக் கொன்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சரமாரியாகச் சுட்டதில் குர்தீப் சிங் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலை நடந்த பகுதிக்கு அருகிலிருந்த கடைகள், வீடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்த வழக்குத் தொடர்பாக தந்தை-மகன் உள்பட ஐந்து பேர் சந்தேகத்தின்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை ஏன்?

குர்தீப் சிங் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளார். அவரின் கொலையில் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்புள்ளது.

ஆகவே கொலை குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அலுவலர்கள் விசாரிக்க வேண்டும் என சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குர்தீப் சிங் கொலை பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்கை கணவரைக் கொல்ல முயன்று தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details