திருவனந்தபுரம்: ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம் என்ற விதிமுறையுடன் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வருகிற 26ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
முன்னதாக நாளொன்றுக்கு இரண்டாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனினும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் என்று திருவாங்கூர் தேவஸம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்றிதழும் கட்டாயம் ஆகும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை கோயில் ஏழு மாதங்களாக பூட்டப்பட்டது. இந்நிலையில், இரண்டு மாதம் மண்டல பூஜைக்காக நவம்பர் மாதத்தில் (கார்த்திகை 1) திறக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க :சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!