ஆர்டிபிசிஆர் சோதனையில் கரோனா இல்லை என உறுதியான பின்னர் வழங்கப்படும் சான்றிதழ்களை கட்டாயம் பக்தர்கள் காட்ட வேண்டும், கரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது. முன்னதாக பக்தர்கள் ஆலயத்திற்கு வர ஆன்டிஜென் பரிசோதனை போதுமானதாக கருதப்பட்டது.
இது தொடர்பாக கேரள தேவஸம் போர்டு தலைவர் வாசு,”48 மணி நேரத்திற்கு முன்னதாக பக்தர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ்களுடன்தான் சபரிமலைக்கு வர வேண்டும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ்கள் இல்லாதவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்”என்றார்.