மக்களவைத் தேர்தல் அறிவித்ததிலிருந்தே மேற்குவங்கத்தில் பாஜக, திருணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு பாஜக மேற்கு வங்கத்தில் 18 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
மேற்குவங்க அரசியல் சூழ்நிலை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்து! - வன்முறைகள்
மும்பை: மேற்க வங்கத்தில் நடக்கும் வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
mohan bhagwat
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்ற மாநிலங்களில் இதுபோலவா நடக்கிறது. அங்கு நடக்கும் வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டியவை" என்றார்.