தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் 95 லட்சம் ரூபாயை பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி! - வருமான வரித்துறை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வருமானவரித் துறையினர் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ 95 லட்ச கருப்பு பணத்தினை பறிமுதல் செய்தனர்.

வருமான வரித்துறை

By

Published : Mar 21, 2019, 1:38 PM IST

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும்; பரப்புரைகளும் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வருமானவரித் துறையினர் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யவைத்திருந்த ரூ.95 லட்சம் பிடிபட்டதாகவும், அதில் 44 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு அதன் உரிமையாளர் கணக்கு காட்டியதால் மீதி திருப்பி அளிப்பட்டதாகவும் வருமானத் துறை இணை இயக்குநர் பங்கஜ் ஷ்ரிவஸ்தவா கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குஜராத் மாநிலத்தில் கணக்கில் வராத 1.40 கோடி ரூபாய் சிக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் சமயங்களில் கறுப்புப் பணத்தினை பட்டுவாடா செய்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 33 மாவட்டங்களில் இயங்கிவருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக் கூடாது எனவும், இதனை மீறினால் தேர்தல் அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details