பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லையில் போதை தடுப்புப் பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த இருவரை அவர்கள் கைதுசெய்து விசாரித்ததில் பாகிஸ்தானில் இருந்து சட்லெஜ் நதி வழியாக இந்தியாவிற்குள் போதைப்பொருளான ஹெராயினை கடத்திவந்தது தெரியவந்தது.
பஞ்சாபில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - heroin
சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து சட்லெஜ் நதி வழியாக ஹெராயின் கடத்திய இருவரை போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
ரூ. 5 கோடி மதிப்பிலான கெராயின் பறிமுதல்
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.