தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுயசார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

டெல்லி: சுயசார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் வங்கி அல்லாத, வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நாணய நிதி நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ) ஆகியவற்றிற்கு சிறப்பு பணப்புழக்க திட்டம் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுயசார்ப்பு இந்திய திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் ஒதுக்கீடு!
சுயசார்ப்பு இந்திய திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் ஒதுக்கீடு!

By

Published : Sep 13, 2020, 8:15 PM IST

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், "செப்டம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி ரூ.10,590 கோடி மதிப்புடைய 37 திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 783.5 கோடி நிதியுதவி கோரும் ஆறு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி) / வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் (எச்.எஃப்.சி) / நாணய நிதி நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ) ஆகியவற்றிற்கான ரூ .30 ஆயிரம் கோடி சிறப்பு பணப்புழக்க திட்டம் அமல்படுத்தியதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் சிறந்த 23 தனியார் துறை வங்கிகள் அறிவித்தபடி, செப்டம்பர் 10ஆம் தேதி நிலவரப்படி 42,01,576 கடன் தாரர்களுக்கு ரூ.1,63,226.49 கோடி கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனி நபர்களுக்கு புதிய கடன் வழங்க NBFC, HFC, MFI ஆகியவற்றுக்கான பகுதி கடன் உத்தரவாத திட்டம் 2.0. அமல்படுத்தப்பட்டுள்ளது.

நபார்ட் மூலம் விவசாயிகளுக்கான கூடுதல் அவசர பணி மூலதன நிதியுதவி வழங்க ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.5,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதி (எஸ்.எல்.எஃப்) கீழ் நபார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இந்த தொகையை சிறிய NBFC, NBFC-MFI ஆகியவற்றுக்கு ஒதுக்கியுள்ளது. அதை வெளியிடுவதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை நபார்ட் இறுதி செய்துவருகிறது.

இதைத்தவிர, நபார்ட் இரண்டு ஏஜென்சிகள், வங்கிகளுடன் இணைந்து ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உத்தரவாதத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details