இந்தியாவில் போதைப் பொருள் கடத்தப்படுவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. இதையடுத்து, கடத்தலை தடுத்து நிறுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு லாரி மூலம் கோடிக்கணக்கில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லாரியில் ரகசிய அறை அமைத்து போதைப் பொருள் கடத்தல் - ஆந்திரவிற்கு போதை பொருள் கடத்தல்
ஹைதராபாத்: ஆந்திரவிற்கு லாரியின் சீட்டு அடியில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 3.85 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Cannabis seized
போதைப்பொருள் சிக்கியது எப்படி:
இதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது, அகானம்புடி சோதனைச் சாவடிக்கு வந்த ஒரு லாரியை சோதனை செய்தனர். அதில் 1,925 கிலோ போதைப் பொருள் கடத்திவந்தது தெரியவந்தது. லாரியின் சீட்டு பகுதியில் சிறிய அறைபோல் உருவாக்கி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டுநரை கைது செய்து வாகனம் மற்றும் ரூ .3.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.