தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலைகளைச் செப்பனிட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதலமைச்சர் நாராயணசாமி - புதுச்சேரி சாலை பாதுகாப்பு வாரம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் சாலைகளைச் செப்பனிட ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

rs 100 crore allocated for repairing roads in puducherry
சாலைகளை சீர்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதல்வர் நாராயணசாமி

By

Published : Jan 27, 2020, 10:19 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் 31ஆவது சாலை பாதுகாப்பு வார சிறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. சாலை பாதுகாப்பில் இளைஞர் சமூகத்தினரால் மாற்றம் கொண்டு வருவதால் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெறும் இவ்விழாவில் புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரி சாரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், ”புதுச்சேரியில் 2017ஆம் ஆண்டு சாலை போக்குவரத்தில் 700 விபத்துகள் ஏற்பட்டன. இது 2018ஆம் ஆண்டில் 149ஆக குறைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி 49 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன. இதற்கு காரணம் புதுச்சேரி காவல்துறை, போக்குவரத்துத் துறை, வாகன ஓட்டிகள்தான்.

சாலைகளை சீர்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதல்வர் நாராயணசாமி

இந்த விபத்து விழுக்காடு இன்னும் குறைக்கப்பட வேண்டும். சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு புதுச்சேரியில் சாலைகளைச் செப்பனிட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் சாலை பழுது, சேதங்கள் ஆகியவற்றினை சரி செய்து ஒழுங்கான சாலைகள் அமைக்கப்படும். சாலை விபத்துகளை குறைக்க நகர போக்குவரத்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.


விழாவில் டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்ஷவா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : என்.ஆர்.சி.யில் திருநங்கைகள் நீக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details