புதுச்சேரி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி அருண். இவருக்கும், வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த முரளி தரப்பினருக்கும், கடந்த ஒரு வருடமாக முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், பிள்ளையார் குப்பம் பகுதிக்குச் சென்று, அருணைக் கொலைசெய்யும் நோக்கில், அவர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
அரிவாளுடன் ஊருக்குள் வலம்வந்த ரவுடிகள் - வெளியான சிசிடிவி காட்சி - அரிவாள், இரும்பு பைப்புகளுடன் ஊருக்குள் வலம்வந்த ரவுடிகள்
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் பகுதியில் இரண்டு ரவுடிகள் அரிவாள், இரும்பு பைப்புகளுடன் ஊருக்குள் வலம்வந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதில் அதிருஷ்டவசமாக அருண் தப்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முரளி தரப்பினர், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். மேலும் அங்கு சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த அருண் மற்றும் அவரின் நண்பர்கள், முரளி தரப்பினரை, செங்கல், உருட்டுக் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் முரளி, அவரது நண்பர் சந்துரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுச்சேரி வில்லியனூர் காவல் துறையினர், ரவுடிகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், பிள்ளையார்குப்பம் பகுதியில் 2 ரவுடிகள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்பு, அவர்கள் இருவரும் அரிவாள், இரும்பு பைப்புகளுடன் ஊருக்குள் நடமாடிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.