உத்ராகண்ட் மாநிலம், ரூர்க்கி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பவர், அப்பகுதி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மகள் விமான பணிப்பெண்ணாக உள்ளார் எனவும், அவருக்கு வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து ஆபாசக் குறுச்செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பரேலி பகுதியைச் சேர்ந்த பிடெக் மாணவர் ரோஹித் சக்சேனா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்ணும், அவரது நண்பரும் பரேலி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அப்போது குற்றவாளி ரோஹித்தின் தந்தை பரேலி ரயில் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.